இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது பாரதிய ஜனதா கட்சி தான் என்றாலும் உத்தரவு போடும் தலைமைப்பீடம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான்.

Advertisment

இந்து மத கோட்பாடுகளை தாங்கும் ஒரு தத்துவார்த்த தலைமைதான் ஆர்.எஸ்.எஸ். இந்த ஆர்.எஸ்.எஸ் தலைமையின் கீழ் பல்வேறு அமைப்புகள் உள்ளது. அதன் அரசியல் கட்சியாக இருப்பது தான் பாரதிய ஜனதா கட்சி. அதேபோல் நாடு முழுக்க பல்வேறு பெயரில் பல அமைப்புகள் உள்ளது.அவற்றில் ஒன்றுதான் இந்து முன்னணி மற்றும் சங்பரிவார். இந்து முன்னணியில் இன்று அன்னையர் முன்னணி என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடந்தது.

erode district rss meeting

அதன் மாநில தலைவர் கடேஸ்வரா சி.சுப்ரமணியம் தலைமையில், மாநில துணைத்தலைவர் கு.பூசப்பன், மாநில பொதுசெயலாளர் சி.பரமேஸ்வரன் மற்றும் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சி .மாயக்கூத்தன் ஆகியோர் முன்னிலையில் ஈரோடு பெருந்துறை ரோடு குருசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் நடந்தது.

இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து இந்து அன்னையர் முன்னணியைச் சேர்ந்த பெண்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மக்களிடம் எடுத்து வைத்து, அதற்கு பெண்கள் மத்தியில் ஆதரவைத் திரட்ட வேண்டும் என இந்து முன்னணி தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Advertisment

erode district rss meeting

ஒரு அரசியல் கட்சிக்கு துணை அமைப்புகள் இருப்பது வழக்கம். ஆனால் ஒரு மதவாத அமைப்புகள் துணை அமைப்பாக அதுவும் பெண்களுக்கு என்று தனி அமைப்பாக இருப்பது இந்து முன்னணியில் தான் என்கிறார்கள்.