/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art hand cop_47.jpg)
ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி பங்களாபுதூர் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கடம்பூர் வனப்பகுதி, கே.என். பாளையம், அம்மன் நகர் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்தபோது அவர்கள் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மாதேஷ் (வயது 27), கிரி கார்த்திக் (வயது 24) எனத்தெரிய வந்தது. அவர்கள் கையில் வைத்திருந்த பாலித்தீன் பையை சோதனை செய்தபோது அதில் 50 கிராம் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
மேலும் இந்த போதைப் பொருட்களைவிற்பனைக்கு வைத்திருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
Follow Us