செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை மாவட்ட உதவி அதிகாரிகள் (ஏ.பி.ஆர்.ஓ) பலருக்கு சமீபத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டு, அவர்கள் பி.ஆர்.ஓ.க்களாக நியமனம் செய்தது தமிழக அரசு.

Advertisment

அதில் சேலம் மாவட்டத்தில் ஏ.பி.ஆர்.ஓ.வாக இருந்த சதீஸ்குமார் பதவி உயர்வு பெற்று, ஈரோடு மாவட்ட பி.ஆர்.ஓ வாக அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து சதீஸ்குமார் முறைப்படி இன்று (03.12.2019) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் வாழ்த்து பெற்று பி.ஆர்.ஓ.வாக அவரது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

erode district new public relationship officer satheesh kumar appointed tn govt

புதிய பி.ஆர்.ஓ. சதீஸ்குமாருக்கு ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் சார்பில் பத்திரிகையாளர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். இவரின் சொந்த மாவட்டம் ஈரோடு என்பது குறிப்பிடதக்கது.