erode district collector rajagopal sunkara taken charge  

Advertisment

பொது மக்களின் குறைகளைத்தீர்த்து அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பாடுபடுவேன் எனஈரோடு மாவட்ட புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் புதிய ஆட்சியராக ராஜகோபால் சுங்கரா நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து முறைப்படி ஆட்சியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ஈரோடு மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பளித்த முதல்வருக்கும் வீட்டு வசதித்துறை அமைச்சருக்கும் நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஈரோடு மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி. பொதுமக்கள் குறைகளை தீர்க்கவும், அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் முழுமையாக முயற்சி செய்வேன்.

தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுவேன். ஈரோடு மாவட்டத்தின் முக்கிய தொழில்களான விவசாயம், நெசவு, தொழிற்சாலை வளர்ச்சிக்காக முழு அளவில் பாடுபடுவேன். பொதுமக்கள் தங்களது குறைகளை எந்தநேரமும் தெரிவிக்கலாம். இதற்காக 0424-2260211 என்ற தொலைப்பேசி எண்ணும், 97917 88852 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும்புகார் தெரிவிக்கலாம்" எனக் கூறினார்.