தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முகாம் அலுவலகங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.