ADVERTISEMENT

'கால்வாய்களைப் புனரமைக்க நீண்டகால திட்டம்'- முதல்வர் பழனிசாமி!

11:10 AM Jul 17, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் ரூபாய் 53.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். மேலும் ரூபாய் 97.85 கோடி மதிப்பிலான 15- க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

அதன் தொடர்ச்சியாக கரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பணிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

அதன் பிறகு பேசிய முதல்வர் பழனிசாமி, "கால்வாய்களைப் புனரமைப்பதற்கான நீண்டகால திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. வேளாண்துறைக்குத் தண்ணீர் முக்கியம் என்பதால் அதைச் சேமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் வண்டல் மண் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. குண்டாறு வழித்தடத்திலும் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்படும். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை விரைவில் தரம் உயர்த்தப்படும், என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT