Advertisment

விபரீத முடிவெடுத்த வடமாநில இளைஞர்; வேலைக்குச் சென்று திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

erode chennimalai incident chhattisgarh youth issue

சத்தீஸ்கர் மாநிலம் ஜனிஹீர் பகுதியைச் சேர்ந்தவர் டிஜோராம் (வயது 20). இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த ஈங்கூர் நல்லிகவுண்டன்பாளையத்தில் உள்ள ஒரு ஆலையில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவரது அறையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சோனுபரீத் (வயது 20)என்பவரும் தங்கி அதேஆலையில் வேலை பார்த்து வந்தார்.

Advertisment

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு டிஜோராம் சத்தீஸ்கருக்கு சென்றார். அதன் பிறகு மீண்டும் தான் வேலை செய்யும் ஆலைக்கு வந்தார். சொந்த ஊர் சென்று திரும்பி வந்ததிலிருந்து டிஜோராம் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார். அதன் பிறகு வேலைக்குச் செல்லாமல் அறையிலேயே இருந்து வந்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார்.

Advertisment

இந்நிலையில் நேற்று அறையில் உடன் இருந்த சோனுபிரீத்வேலைக்குச் சென்றுவிட்டார். அறையில் டிஜோராம் மட்டும் இருந்துள்ளார். மாலையில் வேலையை முடித்துக் கொண்டு சோனு ப்ரீத் அறைக்கு வந்தபோது டிஜோராம் அறையில் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சென்னிமலை போலீசாருக்குத்தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிஜோராம் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

chhattisgarh Erode labours police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe