/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siva_18.jpg)
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர் சிலை திறப்புக்கு பிறகு அடுத்ததாக கலைஞரின் குருகுலமான தந்தை பெரியாரின் ஈரோட்டில் கலைஞரின் முழு உருவ சிலை திறப்பு விழா வருகிற 30ந் தேதி மாலை நடக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/siva1_2.jpg)
கலைஞரின் சிலையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்கிறார்.
சிலை பீடத்தில் நிறுவப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சு.முத்துச்சாமி இதற்கான வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வந்த தி.மு.க.வின் மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா ஈரோட்டில் கலைஞர் சிலை நிறுவப்படும் இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார். தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)