Advertisment

செல்ஃபி எடுக்க வந்த பெண்ணுக்கு அமைச்சர் போட்ட கண்டிஷன்! 

Erode byelection minister cv Ganesan selfie

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திருவிழாபோல் களை கட்டியுள்ளது.அதிமுக - திமுக என்ற இரண்டு பிரதான கட்சிகளின் முக்கியத்தலைவர்கள்ஈரோடு கிழக்கு தொகுதியில்முகாமிட்டுள்ளார்கள். குறிப்பாக அதிமுகவின்எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் இங்கு முகாம் அமைத்திட, அதேபோல் திமுகவின்எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் என எல்லோரும் களத்தில் இறங்கி உள்ளார்கள். தெருத்தெருவாக வீதி வீதியாகச் செல்லும் இவர்கள் வாக்காளர்களிடம் தங்கள் கூட்டணிக்கு வாக்கு கேட்டு வருகிறார்கள்.

Advertisment

இந்நிலையில் அமைச்சர் சி.வி. கணேசன் 11 ஆம் தேதி திருநகர் காலனி பகுதியில் வாக்கு சேகரித்து வந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளம்பெண், “அமைச்சர் சார் உங்களோடு ஒரு செல்ஃபி எடுக்கலாமா?” எனக் கேட்டுள்ளார். அதற்கு அமைச்சரும், “ஓ...தாராளமாக... ஆனால் ஓட்டு மட்டும் எங்கள் கூட்டணியான கை சின்னத்திற்கு மறக்காமல் போடுங்கள்” எனக் கூறியுள்ளார். அதன் பிறகு அந்தப் பெண் அமைச்சர் கணேசனோடு செல்ஃபி எடுத்துள்ளார்.

Advertisment

byelection Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe