Campaigning Towards Finals; End at 6 p.m

Advertisment

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லை. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் சர்ச்சைகளும் விவாதங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நாள் அமைச்சர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை ஈரோட்டில் முகாமிட்டு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஈரோடு கிழக்கு பகுதிக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்குப் பகுதியில் பல்வேறு இடங்களில் வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தேமுதிக சார்பில் அக்கட்சியின் தொண்டர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று ஆறு மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது ஈரோடு இடைத்தேர்தல் களம்.