Advertisment

ஈரோடு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

Advertisment

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து வரும் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில், தி.மு.க, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் போட்டியிடுகின்றனர்.

அவர்களது பெயர் பட்டியல் மற்றும் சின்னங்கள் கடந்த 20-ம் தேதி ஒதுக்கீடு செய்து இறுதி செய்யப்பட்டன.அதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட ‘பேலட் ஷீட்’களை அச்சிடப்படும் பணிகளை தேர்தல் அலுவலர்கள் சென்னைக்கு நேரடியாக சென்று மேற்கொண்டனர்.

இந்நிலையில், அந்த பேலட் ஷீட்களை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி இன்று காலை 9.30 மணியளவில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தொடங்கியது. இதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநகராட்சி நுழைவாயில் வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதுபோல் வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர்கள், பெயர் சின்ன பொருத்தும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கும் உள்ளே செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. வேட்பாளர்கள் முகவர்கள், கடும் சோதனைக்கு பிறகே உள்ள அனுமதிக்கப்பட்டனர்.

Advertisment

அவர்களது உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனை செய்யப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் ஸ்ரீகாந்த் முன்னிலையில் தொடங்கியது. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பேலட் ஷீட்களை பொருத்தும் பணியை அலுவலர்கள் மேற்கொண்டனர். ஈரோடு கிழக்குத் தொகுதியில் 237 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் வாக்குப் பதிவுக்காக கூடுதலாக 20 சதவீதம் வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சேர்த்து 284 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே பொருத்த முடியும். கூடுதலாக கடைசியில் நோட்டாவுக்கான பட்டன் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுடன் சேர்த்து 47 பட்டன்கள் தேவை உள்ளதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் 3 இயந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளன. அதன்படி, இந்தத் தேர்தலில் 237 வாக்குச் சாவடிகளிலும், 20 சதவீதம் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சேர்த்து மொத்தம் 852 வாக்குப்பதிவு எந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 308 விவி பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதில், 852 வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் வேட்பாளரின் பெயர், சின்னம் அச்சிடப்பட்டுள்ள பேலட் ஷீட்கள் பொருத்தப்படுகிறது. இன்று தொடங்கிய இந்தப் பணி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் நிறைவடையும் அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக ஈரோடு மாநகராட்சி பாதுகாப்பு அறையில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டு மாநகராட்சி கூட்டரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

By election Erode Naam Tamilar Katchi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe