Advertisment

ஈரோடு இடைத்தேர்தல்; இளைஞர்களை குறி வைத்து ஸ்மார்ட் வாட்ச்

election

Advertisment

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேச்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து ஈரோட்டில் சில அரசியல் கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுப்பது, பரிசுப் பொருட்கள் கொடுப்பது எனப் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது.

அண்மையில் காங்கிரஸ் சார்பில் குக்கர் பரிசுப் பொருளாக வழங்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில்18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து ஸ்மார்ட் வாட்ச் மற்றும் கைக் கடிகாரம், வெள்ளிக் கொலுசு ஆகியவை இன்று காலை முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வீரப்பன் சத்திரம் பகுதிக்குட்பட்ட வீடுகளில்ஒரே மாதிரியான ஸ்மார்ட் வாட்ச்கள், வெள்ளிக் கொலுசுகள் இன்று காலை முதல் கொடுக்கப்பட்டு வருகிறதுஎனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

byelection Erode
இதையும் படியுங்கள்
Subscribe