Advertisment

ஈரோடு இடைத்தேர்தல்; இன்று தொடங்குகிறது வேட்புமனு தாக்கல்

Erode by-election; Nomination starts today

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதேபோல் நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆனால் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

Advertisment

இந்நிலையில் கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் பிப்ரவரி 7. வேட்புமனு மீது பிப்ரவரி 8ஆம் தேதி மறு பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுவை திரும்பப் பெற பிப்ரவரி 10ஆம் தேதி கடைசி நாள். முற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பிப்ரவரி ஐந்து ஞாயிறு என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு மூன்றாம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன், தேமுதிக சார்பாக ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆனந்த், அமமுக சார்பாக சிவ பிரசாந்த் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். தற்பொழுது வரைஅதிமுகவில் எடப்பாடி அணி சார்பிலும், ஓபிஎஸ் அணி சார்பிலும்வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe