Advertisment

ஈரோடு இடைத்தேர்தல்- இன்று வேட்புமனு தாக்கல்

nn

70 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம், இந்தாண்டு பிப்ரவரி 23ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது.

Advertisment

அதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. வேட்பாளர்கள் அளிக்கும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும்.

Advertisment

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று (10/01/2025) தொடங்க இருக்கிறது. பொங்கல் விடுமுறைக்காக 11, 12, 14, 15, 16 ஆகிய தேதிகளில் விடுமுறை என்பதால் 10, 13, 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

byelection Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe