Advertisment

ஈரோடு இடைத்தேர்தல்; நாளை வாக்கு எண்ணிக்கை 

 Erode by-election; Counting of votes tomorrow

Advertisment

டெல்லி சட்டமன்ற தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 05/02/2025 அன்று காலை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமி போட்டியில் உள்ளனர். அதேபோல் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். பதிவான வாக்குகள் நாளை (08/02/2025) எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் ராஜகோபால் தெரிவித்துள்ளார். இன்று (07/02/2025) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 246 தகவல் வாக்குகள் பதிவாகியுள்ளது. காலை 7:30 மணிக்கு தபால் வாக்கு பெட்டிகள் திறக்கப்படும். எட்டு மணி முதல் தபால் வாக்குகள் எனப்படும். மொத்தம் 17 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.14 மேஜைகளில் 17 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒரு சுற்றுக்கு 25 நிமிடங்கள் வரை ஆகலாம்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர்கள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திமுகவினர்கள்ள ஓட்டு போட்டதாக குற்றச்சாட்டை வைத்ததுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்தவர் 'அப்சர்வர் முன்னிலையில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடைய முகவர்களும் இருந்தார்கள். அவர்கள் முன்னிலையில் ஆய்வு (scrutening) பண்ணப்பட்டு நல்லபடியாக முடிக்கப்பட்டது. கள்ள ஓட்டு போடவில்லை என்பதை ஏற்றுக் கொண்டார்கள்''என்றார்.

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe