மக்களுக்கு உதவுவதற்கு விலாசமான மனம் தேவை அது எங்களின் ஈரோடு தொழிலதிபர் தம்பதியினரிடம் உள்ளது என பெருமையோடு கூறுகிறார்கள் ஈரோட்டுவாசிகள்.

Advertisment

Erode businessman couple paid Rs 5 crore for corona

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கரோனா வைரஸ் தடுப்புப் பணிக்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் தொற்றினைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் இந்த பணிகளுக்கு உதவும் வகையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். இதையடுத்து பல்வேறு தொழில்நிறுவனங்கள், தனிநபர்கள் உள்ளிட்டோர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர்.

Erode businessman couple paid Rs 5 crore for corona

இந்நிலையில் தமிழக முதல்வரின் வேண்டுகோளையும் மக்களுக்கு அடிப்படையான மருத்துவத்திற்கு துணை நிற்கவும் ஈரோட்டில் செயல்பட்டு வரும் பிரபல மசாலா நிறுவனமான சக்தி மசாலா நிறுவனம் ரூபாய் 5 கோடியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, நிதியாக வழங்கியுள்ளது. இதன்படி, ரூ 5 கோடிக்கான காசோலையுடன், சக்தி மசாலா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.சி.துரைசாமி, இயக்குநர், திருமதி டி.சாந்தி துரைசாமி ஆகியோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தாங்கள் எடுத்து வரும் சீரிய முயற்சிகளுக்கு சக்தி மசாலா நிறுவனங்களின் சார்பில் இந்த முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு, எங்கள் சக்திமசாலா நிறுவனத்தின் சார்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ 5 கோடி வழங்குகிறோம். இதற்கான காசோலையை இத்துடன் இணைத்துள்ளோம். கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளில் நாங்களும் பங்கேற்க வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisment