Skip to main content

ஆற்றில் மிதந்து வந்த தலையில்லா உடல்; கொலையாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

erode bhavani river young man incident police investigation started 

 

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள செரையாம்பாளையத்தில் பவானி ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் மாலை ஒரு ஆணின் உடல் பகுதி மட்டும் மிதந்து வந்துள்ளது. அதில் அவரது தலை, கை, கால்கள் காணவில்லை. இது குறித்து பெருந்தலையூர் கிராம நிர்வாக அதிகாரி பஞ்சநாதன் கவுந்தப்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் பவானி ஆற்றுக்கு சென்று உடலை கைப்பற்றினார்கள். மேலும் உடல் கூறிய கை, கால்கள், தலை மிதக்கின்றனவா? என்று ஆற்றில் தேடிப் பார்த்தார்கள். ஆனால் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து உடலை மட்டும் மீட்டு பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்தனர்.

 

இதனைத் தொடர்ந்து நேற்று காலை கவுந்தப்பாடி அடுத்த மேற்கு குட்டிபாளையம் பகுதியில் பம்பிங் ஹவுஸ் அருகே தலை மிதப்பதாக கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அந்த தலையை மீட்டனர். இதைப்போல் பெரிய மூலப்பாளையம் பகுதியில் மற்றொரு காலையும், ஆப்பக்கூடல் ஈஸ்வரன் கோவில் அருகே பவானி ஆற்றில் கைகளையும் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட தலை, கை கால்களை எடுத்துக் கொண்டு பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து மீட்கப்பட்ட உடலோடு பொருத்திப் பார்த்தபோது அனைத்தும் பொருந்தியது. அந்த நபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இறந்த நபருக்கு 35 வயது இருக்கும். இறந்த நபரின் தலையில் பலத்த வெட்டு காயம், கம்பியால் குத்திய காயங்கள் உள்ளன. இதன் மூலம் அந்த நபர் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்திக்கின்றனர்.

 

கொலை செய்யப்பட்ட நபர் யார்?எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. அவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட நபர் கவுந்தப்பாடி, கோபி, சத்தியமங்கலம் உட்பட்ட பகுதியில் இருப்பவராக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இந்த பகுதியில் மாயமானவர்கள் பட்டியல் குறித்து சேகரித்து வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் அனைத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க கோபி டி.எஸ்.பி. சியாமளா தேவி தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மேய்ச்சலுக்குச் சென்ற பசு மாடு உயிரிழப்பு - வனத்துறை அறிவிப்பால் பீதியில் கிராம மக்கள்

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
The death of a cow that went to graze - the villagers are in panic due to the notification of the forest department

                                                       கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, சிறுத்தை,  புலி, கரடி, காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, மற்றும் புலிகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு , நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகமணி (41). இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல் மாடுகளை தனது நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். நேற்று முன்தினம் மாலை மாட்டைப் பிடிக்கச் சென்றபோது 4  பசு மாடுகளில் ஒன்று பசுமாடு மாயமாகி இருந்தது. பின்னர்  நேற்று காலை மீண்டும் தேடிய போது அங்குள்ள ஓடையை ஒட்டி பசு மாடு மர்ம விலங்கால் கடிபட்டு இறந்து கிடந்தது. இதுபற்றி தாளவாடி வனத்துறையினருக்கு நாகமணி தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை இறந்த பசு மாட்டினை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பதிவாகி இருந்த கால் தடைகளை வைத்து  பசுமாட்டை அடித்துக் கொன்றது புலி என வனத்துறையினர் தெரிவித்தனர். புலி பசு மாட்டை அடித்துக் கொன்ற சம்பாதித்தால் அங்குள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

Next Story

வேட்டைத் துப்பாக்கி வெடித்து இளைஞர் பலி; துப்பாக்கியைத் தேடும் போலீசார்

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
Hunting gun blast passed away youth

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள வேப்பவயல் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் லட்சுமணன்(20), அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பர் சரவணன் மற்றும் அவரது மாமா தேக்கமலை ஆகியோர் நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி காடுகளில் வேட்டையாடுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் இவர்கள் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

Hunting gun blast passed away youth

தற்போது, அந்த நாட்டுத் துப்பாக்கியில் வெடி மருந்து செலுத்தி சுட முயன்ற போது சுடமுடியவில்லை. காரணம் வெடிமருந்து செலுத்தும் பகுதியில் உள்ள ஓட்டை பெரிதாக இருந்ததால் அந்த ஓட்டையை அடைத்து சிறியதாக்குவதற்காக அதே கிராமத்தில் உள்ள ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் பட்டறையில் வெல்டு வைக்க கொண்டு சென்றுள்ளனர். ஆறுமுகம் வெல்டிங் செய்த போது துப்பாக்கு இரும்பு குழாய் அதிக சூடாகி ஏற்கனவே துப்பாக்கி குழாயில் செலுத்தப்பட்டிருந்த வெடி மருந்துடன் துப்பாக்கி வெடித்து சிதறியுள்ளது. 

துப்பாக்கி வெடித்து சிதறிய இந்த சம்பவத்தில் லட்சுமணன் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து அவரை அருகே இருந்தவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமணன் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும், சம்பவத்தின் போது லட்சுமணன் கூட இருந்த சரவணன் மற்றும் அவரது மாமா தேக்கமலை ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் ஆறுமுகம் தலைமுறைவாக உள்ளதால் அவரைத் தேடி வருகின்றனர்.  வெல்டிங் செய்யும் போது வெடித்து லெட்சுமணன் உயிர் போக காரணமாக இருந்த வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டுத் துப்பாக்கியையும் தேடி வருகின்றனர்.

Hunting gun blast passed away youth

சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி சரக டிஐஜி மனோகர், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, இலுப்பூர் கோட்டாட்சியர் பெரியநாயகி, வட்டாட்சியர் சூரியபிரபு உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் விசாரணை மேற்கொண்டு சம்பவ இடத்தை பார்வையிட்டனர். வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டுத் துப்பாக்கி வெடித்து இளைஞர் லட்சுமணன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள சூழ்நிலையில் அவர்களுக்கு துப்பாக்கி எவ்வாறு வந்தது? யார் செய்து கொடுத்தது? என்பது குறித்தும் அது எவ்வாறு வெடித்தது என்பது குறித்தும் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.