ஈரோடு மாவட்டம் பவானி அருகே காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று மதியம் ஈரோடு கருங்கல்பாளையம், வளையல் கார வீதி ,குப்பி பாலம் என்ற இடத்தில் வாய்க்காலில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர்.

Advertisment

m

அப்போது வாய்க்காலில் ஒரு பெண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளின் சடலம் மிதந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் ஈரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர். தற்கொலை செய்து கொண்ட பெண் தனது சேலையின் துப்பட்டாவை இரண்டு குழந்தைகளின் உடம்பில் கட்டியிருந்தார்.

Advertisment

அந்த பெண்ணிற்கு 35 வயது இருக்கும் ஒரு குழந்தைக்கு 12 வயது மற்றொரு குழந்தைக்கு 7 வயது இருக்கலாம். மூன்று பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா ? அல்லது வேறு எதாவது காரணமா இல்லை கொலை செய்யப்பட்டார்களா? என்று உடனடியாக தெரியவில்லை.

Advertisment

இறந்தவர்கள் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று முதலில் போலீசார் சந்தேகப்பட்டனர். ஈரோடு கருங்கல்பாளையம் சூரம்பட்டி உள்பட போலீஸ் நிலைய பகுதிகளில் பெண்கள் யாராவது மாயமாகி இருக்கிறார்களா என்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

இறந்தவர்கள் வெளியூரை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இறந்தவர்களின் போட்டோக்களை ஈரோடு ,சேலம் கோவை ,நாமக்கல் போன்ற போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாவது நாளாக அவர்களது உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளன. இரு குழந்தைகள் தாய் என மூவரின் இறப்பு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.