Advertisment

ஈரோட்டில் ஃபைன் மட்டும் 18 லட்சத்தை தாண்டியது...!

 In Erode alone, the fine has crossed 18 lakhs ...!

கடந்த மூன்று மாதங்களாக, ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் வேகமாக இருந்தது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதில் பாதிக்கப்பட்டு வந்தனர். மாவட்டத்தில் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 11 ஆயிரத்தைக் கடந்தது. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி வந்தது.

Advertisment

ஆனாலும் வெளியே வரும் மக்கள் முகக்கவசம் அணியாமல் வருவதை அதிகமாக காணமுடிந்தது. இதனைத்தொடர்ந்து முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு, ரூபாய் 200 அபராதம், பொது இடங்களில் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் கடைகள், பெரிய நிறுவனங்களில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்காவிட்டால் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

அதன்படி மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் ஆங்காங்கே முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். நாளொன்றுக்கு மாவட்டம் முழுவதும் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு இது போன்று அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இதேபோல், பொது இடங்களில் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்பியவர்கள், ஜவுளிக் கடைநிறுவனங்களில் மக்கள் கூட்டத்தை தவிர்க்காதவர்கள் இப்படி அறிவிப்புகளை முறையாகக் கடைப்பிடிக்காதவர்களுக்கு, அபராதம் தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகிறது.அதன்படி மாவட்டம் முழுவதும் இதுவரை ரூபாய் 18,77,200 ரூபாய் அபராதமாகவசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

coronavirus Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe