Advertisment

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவிய அ.தி.மு.க. நிர்வாகி!

Erode AIADMK Personality help to auto drivers

ஐம்பது நாட்களாக அப்பாவி கூலி தொழிலாளர்களின் வாழ்க்கையை அடியோடு சாய்த்துவிட்டது ஊரடங்கு உத்தரவு. ஒவ்வொரு நாளும் உழைத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்க்கை நடத்துபவர்களை பரிதவிப்பில் ஆழ்த்தியுள்ள இந்த ஊரடங்கில் சகமனிதனுக்கு உதவும் மனித இதயங்களும் ஒவ்வொரு ஊரிலும் இருப்பதை நேரில் நம்மால் காண முடிகிறது.

Advertisment

குறிப்பாக ஈரோடு, ஜவுளி மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் நகரம். இத்தொழில்களை நம்பியே லட்சக்கணக்கான மக்கள் இங்கு வாழ்க்கை நடத்துகிறார்கள். இவர்களில் பெரும்பாலனோர்களுக்கு அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் ரொக்கம், இலவச ரேஷன் பொருட்கள்தான் கிடைத்தது. இந்நிலையில் தி.மு.க.சார்பில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியும், மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. அதேபோல் சில பகுதிகளில் மட்டும் அரிசி, முட்டை போன்றவற்றை ஈரோடு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கமும், தென்னரசுவும் வழங்கினார்கள்.

Advertisment

இதில் குறிப்பாக முன்னாள் ஈரோடு மாநகர அ.தி.மு.க.செயலாளரும், தற்போது பெரியார் நகர் பகுதி செயலாளருமான பெரியார் நகர் மனோகரன் ஏழை கூலி தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் உணவு பொருட்களுடன் பேண்ட், சர்ட், சேலை, பாதுகாப்பு உடைகளையும்தாராளமாக வழங்கினார். இதற்கிடையே ஈரோடு நகரத்தில் தினசரி கூலிக்கு ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் ஊரடங்கால் பெரிதும் துன்பப்படுவதை உணர்ந்து ஈரோட்டில் உள்ள 600 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஒட்டுனர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களைஇன்று மனோகரன் வழங்கினார்.

Auto drivers admk relief lockdown coronavirus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe