Advertisment

ஈரோட்டில் 6-ந் தேதி முதல் அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி தொடக்கம்

nn

Advertisment

அரசு பள்ளி மாணவ- மாணவிகள் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று எம்.பி.பி.எஸ் படிக்க வழிவகை செய்யும் விதமாக அரசு பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் நடப்பாண்டில் நீட் மற்றும் ஜெ. இ. இ பயிற்சி வகுப்புகள் ஈரோடு மாவட்டத்தில் வரும் 6-ந் தேதி தொடங்குகிறது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறையினர்கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, எலைட் பள்ளி என 133 பள்ளிகளில் நீட், ஜெ.இ.இ. பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. வகுப்பை காலை அல்லது மாலை நேரத்தில் நடத்திக் கொள்வது குறித்து அந்தந்த பள்ளி ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம். திங்கள் முதல் வியாழன் வரை தினமும் பயிற்சி வகுப்பு நடக்கும். வெள்ளிக்கிழமை தேர்வு குறித்த மதிப்பீடு நடக்கும். இதே நடைமுறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை நீட் தேர்வு பயிற்சி வகுப்பாக மட்டும் நடந்தது. இந்த ஆண்டு பயிற்சி வகுப்புடன் தினமும் தேர்வும் நடக்கிறது' இவ்வாறு கூறினர்.

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe