Advertisment

முதன்முறையாக ஈரோட்டில் ஜல்லிக்கட்டு!

e

Advertisment

தமிழர்களின் வீர விளையாட்டாடுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு . தென்மாவட்டங்களான அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மட்டுமே இந்த ஜல்லிகட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில் கொங்கு மண்டல மான ஈரோட்டில் முதன்முறையாக இன்று நடைபெற்றது.

e

ஈரோடு அடுத்துள்ள பவளத்தான்பாளையம் ஏஈடி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. ஈரோடு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த ஜல்லிக்கட்டு போட்டி காலை 8.30 மணிக்கு தொடங்கியது. ஈரோடு கலெக்டர் கதிரவன் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Advertisment

er

முதலில் கோயில் காளைக்கு பூஜைகள் செய்யப்பட்டு வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து ஈரோடு, திருப்பூா், சேலம், திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. மொத்தம் 192 காளைகள் ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொண்டன. காளைகளை அடக்குவதற்காக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 15 வீரர்கள் உள்பட மொத்தம் 122 மாடுபிடி வீரர்கள் முன் பதிவு செய்திருந்தனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கினார்கள். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு அமைச்சர்கள் சார்பில் தங்ககாசுகளும், செல்போன், ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள் கொடுக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டியை காண ஈரோடு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். ஈரோடு மக்களுக்கு உற்சாகமும் புது அனுபவமாகவும் இருந்தது முதன்முதலாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டி .

Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe