Skip to main content

கார்பரேட்டுகளுக்காக ஸ்மார்ட் சிட்டி .... வெளியேற்றப்படும் ஜவுளி அடையாளங்கள்!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

 

ஜவுளி என்றாலே தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுவது கோவையையொட்டிய கொங்கு மண்டலம்.   கோவை, திருப்பூர்,ஈரோடு, கரூர் இங்கு தான் துணி உற்பத்தி விற்பனை என எல்லாமும் நடைபெறுகிறது. குறிப்பாக ஈரோடு ஜவுளி சந்தை புகழ் வாய்ந்தது. கைக்குட்டையிலிருந்து அனைத்து ஜவுளி ரகங்களும் இங்கு கிடைக்கும். அந்த சந்தையின் பெயர் கனி மார்கெட் என்பது. இவை தவிர மூன்று இடங்களில் ஐவுளி சந்தை செயல்படுகிறது. 

 

er

 

பிரசித்தி பெற்ற இந்த கனி மார்கெட்டில் ஆயிரக்கணக்கான சிறு, குறு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து எல்லோரையும் அப்புறப்படுத்தத் தான் மத்திய பா.ஜ.க. அரசின் திட்டமான ஸ்மார்ட் சிட்டி இங்கு வருகிறது.  இந்த சந்தையில் தினசரி கடைகள் இரண்டாயிரமும்,  வாரச்சந்தை 1750  கடைகளும் இயங்கி வருகிறது. 

 

குறிப்பாக திங்கட்கிழமை  இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை  நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரபலமானது.   இந்த வாரச் சந்தைக்காக  வெளி மாநிலங்களான உ.பி., பிகார், டெல்லி, ஒடிசா, கர்நாடகா , மும்பை, கேரளா மற்றும் வெளி நாடுகளான நேபாளம், வங்கதேசத்திலிருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.  மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து ஜவுளி வியாபாரம் செய்கிறார்கள்.  ஜவுளி சந்தையில் கிடைக்கும் துணிகள் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 

 

இந்த நிலையில் தான்  மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ .54 கோடி மதிப்பில்  ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் அமைக்க இங்கு முடிவு செய்யப்பட்டது.  இதற்காக ஜவுளி சந்தையை அகற்றி  அங்கு ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   இதற்கு ஜவுளி வியாபாரிகள் தங்களுக்கு மாற்று இடம்  ஒதுக்கப்படவில்லை.  எனவே ஜவுளி சந்தை அகற்றும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.  இது   சம்பந்தமாக ஈரோடு மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளனர். 

 

ஆனால் எதுவும் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது. தற்போது தீபாவளி நெருங்கி வருவதால்  தீபாவளி முடியும் வரை   ஜவுளி சந்தையை  அகற்றும் பணியில் ஈடுபடக் கூடாது என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.  இந்நிலையில் இன்று எந்த வித  ஒரு முன்னறிவிப்பும் இன்றி ஜேசிபி எந்திரம் மூலம் கடையை  அகற்றும் பணி தொடங்கியது.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் 1000க்கும் மேற்பட்ட ஜவுளி வியாபாரிகள் ஜேசிபி எந்திரத்தை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-  ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஜவுளி சந்தை கடந்த 50 வருடமாக செயல்பட்டு வருகிறது.  இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.  இதை நம்பி பத்தாயிரம்  குடும்பங்களும், முப்பதாயிரம் தொழிலாளர்களும் உள்ளனர்.  வெளிமாநிலத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி வியாபாரிகள் இங்கு வருவார்கள்.  இங்கு விற்கப்படும் ஜவுளிகள் மிகவும் குறைவான விலையில் விற்கப்படுவதால்  இங்க ஜவுளிகள் அவங்க வீடு மட்டுமின்றி திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம், சென்னை வெளிமாநிலங்களில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.  நாங்கள் இதுவரைக்கும் மாநகராட்சிக்கு முறையாக வரி செலுத்தி வருகிறோம்.  எங்களால் எந்த ஒரு பிரச்சினையும் இதுவரை ஏற்பட்டதில்லை. 

 

இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ்  இங்கு 54 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் அமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இத்திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  ஆனால் எங்களுக்கும் முறையாக   மாற்று இடம் இதுவரை வழங்கப்படவில்லை.  மேலும், தற்போது தீபாவளி நெருங்கி வருகிறது.  தீபாவளி நேரத்தில் இங்கு கோடிக்கணக்கில்  வியாபாரம் நடைபெறும்.   இந்த சமயத்தில் ஜவுளிக்கடையை அகற்றினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நாங்கள் தீபாவளி வரை   ஜவுளி கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்று மாநகராட்சி கமிஷனரிடம் ஏற்கனவே மனு கொடுத்திருந்தார்.  மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

 

 இன்று எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி போதிய கால அவகாசம் கொடுக்காமல் மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் கடையை அகற்றும் பணியை தொடங்கி உள்ளனர்  இது என்ன நியாயம். ஸ்மார்ட் சிட்டி மூலம் கடைகள் கட்டி பெரும் பணக்காரர்களுக்கு கார்பரேட் கம்பெனிகளை வாழ வைக்க மத்திய அரசு நினைக்கிறது. இந்த ஜவுளி துணியிலேயே பிறந்து, வளர்ந்து, வாழும் எங்களை அழிக்கப் பார்க்கிறது அரசு " என வேதனையுடன் கூறுகிறார்கள்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மதிமுக சார்பில் வைகோ நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கணேசமூர்த்தியின் மகன் கபிலனுக்கு ஆறுதல் தெரிவித்தார்.