
சிதம்பரம் கிள்ளை பேரூராட்சி நிர்வாகம், கலைஞர் நகர் இருளர் பழங்குடியினர் பள்ளி இணைந்து பள்ளியின் வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழாவினைநடத்தின. இவ்விழாவுக்கு பேரூராட்சி மன்றத்தலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமைத்தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன் கலந்து கொண்டு பொங்கல் பானையில் பச்சரிசியிட்டு சர்க்கரை பொங்கல் வைத்தார்.

பொங்கல் பானை பொங்கியதும் மாணவ மாணவிகள் ‘பொங்கலோ பொங்கல்’என்று கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து பழங்குடி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் தலைமையாசிரியர் உமா வரவேற்றார். பேரூராட்சி மன்றத்தலைவர் மல்லிகா முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.செயல் அலுவலர் செல்வி, காவல் உதவி ஆய்வாளர்கள் லட்சுமி ராமன், ராம்குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கலைஞர் நகர் SMC உறுப்பினர்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.பேரூராட்சி மன்ற உறுப்பினர் குமார் நன்றி கூறினார்.ஆசிரியர் மணிமாறன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
Follow Us