தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் சமத்துவ விருந்து

 Equality feast in major temples across Tamil Nadu

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. டெல்லியில் செங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தது. அதேபோல தமிழகத்திலும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் முக்கிய கோவில்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சமத்துவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில்களில் நடைபெறும் இந்த சமத்துவ விருந்தில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

சென்னை முழுவதும் 31 கோவில்களில் சமத்துவ விருந்து வழங்கப்பட்டு வருகிறது. திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவிலில் சமத்துவ விருந்தை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அதேபோல் தமிழகத்தின் முக்கிய பகுதியில் உள்ள கோவில்களில் சமத்துவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.

temple TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe