t

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள குற்றாலம் ரிசார்ட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்.எல்,ஏக்கள் இருவர் வந்து தங்கியுள்ளனர்.

Advertisment

தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு விரைவில் வரவுள்ள நிலையில் அணி தாவலாம் என்ற கருத்து நிலவியதால், அவர்களை பாதுகாக்கும் பொருட்டு டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில், எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய இருவரும் இன்று இரவு 9 மணியளவில் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள இசக்கி ரிசாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தகுதி நீக்கம் எம்.எல்.ஏக்களான 18 பேர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.