Advertisment

அதிமுகவில் சாதாரண மக்களுக்கும் உயர்பதவி!!-இபிஎஸ் பேச்சு!!

eps

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்கிருந்து மதுரைக்கு சென்றார். அங்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜு, அமைச்சர் உதயகுமார் தலைமையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னர் அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களின் அடிப்படைத் தேவைகளை நலத்திட்டங்கள்மூலமாக நிறைவேற்றி வரும் அதிமுக அரசின் சாதனைகளை பார்த்து பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே இட்டுக்கட்டி அவதூறு பரப்புவதாக குற்றம் சாட்டினார்.

அப்பொழுது மேடையில் பேசி எடப்பாடி பழனிச்சாமி,

Advertisment

அதிமுக ஒட்டுமொத்த மக்களுக்கும் சொந்த கட்சி. இந்த கட்சியில்தான் ஜனநாயகம் இருக்கின்றது. இந்த கட்சியில்தான் சாதாரண மக்கள் கூட உயர்ந்த பதவிக்கு வரமுடியும். திமுக மத்தியில்ஆட்சியில் இருந்தபோதும், மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோதும் எந்த சாதனையும் செய்ததாக தெரியவில்லை. ஆனால் அவர்கள் குடும்பம் வளம் பெற்றது. திமுக என்றால் அந்த குடும்பத்திற்கு தான் சொந்த கட்சி என குற்றம்சாட்டினார்.

allegations eps pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe