Advertisment

“வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிடுவது திமுகவிற்கு கை வந்த கலை” - இ.பி.எஸ். விமர்சனம்!

EPS says The DMK has mastered the art of making promises

தமிழகக் காவல்துறை காவலர்களிடையே பாரபட்சம் காட்டும் வகையில் வெளியிட்ட பதவி உயர்வு உத்தரவை திரும்பப்பெற்று, 2021ஆம் ஆண்டின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகக் காவல் துறையில் துவக்க நிலையில் பணியில் சேரும் காவலர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் (10 + 5 + 10) என்ற முறையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருவது காலம் காலமாக நடந்து வருகிறது.

Advertisment

தற்போதுள்ள நடைமுறையின்படி, பணியில் சேரும் இரண்டாம் நிலைக் காவலர்கள் 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு முதல் நிலைக் காவலர்களாகவும், தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு தலைமைக் காவலர்களாகவும், அதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, அதவாது 25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு பெறுவார்கள். இந்நிலையில், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், திமுக அரசு காவல் துறையினருக்கு பதவி உயர்வில் மிகப் பெரிய சலுகை ஒன்றை அளிப்பதுபோல், கடந்த 13.6.2025 அன்று செய்தி வெளியீடு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisment

அதன்படி, இரண்டாம் நிலைக் காவலர்களாக 10 ஆண்டுகளும்; முதலாம் நிலைக் காவலர்களாக 3 ஆண்டுகளும்; பிறகு தலைமைக் காவலர்களாக 10 ஆண்டுகளும் பணிபுரிந்தபின், அதாவது 23 ஆண்டுகால பணிக்குப் பிறகு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெறுவார்கள் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, முதலாம் நிலைக் காவலராக 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதை, 3 ஆண்டுகளாகக் குறைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 'சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்' என்று வாயளவில் நாடக வசனம் முழங்கிவிட்டு, 'சொல் வேறு, செயல் வேறு' என்று செயல்படுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார், காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

கடந்த 2021 திமுக தேர்தல் அறிக்கை எண். 389இல், 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளனர். ஓட்டுக்காக வாக்குறுதி அளிப்பதும், அதிகாரம் கைக்கு வந்தவுடன் அவைகளைக் காற்றிலே பறக்கவிடுவதும் திமுகவிற்கு கை வந்த கலை. இந்தப் புதிய பதவி உயர்வு உத்தரவால், புதிதாக பணியில் சேரும் காவலர்களுக்கு ஏதாவது பலன் இருக்குமோ, இல்லையோ, 2001-2005 காலகட்டங்களில் பணியில் சேர்ந்த சுமார் 35 ஆயிரம் காவலர்களுக்குப் பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும் என்றும், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்றும் காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

EPS says The DMK has mastered the art of making promises

மக்களைக் காக்கும் பணியில் உள்ள பெரும்பாலான காவலர்கள் பாதிக்கப்படக்கூடிய இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும், பணியில் உள்ள காவலர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், 2021இல் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

mk stalin tn govt PROMOTION police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe