Advertisment

கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பதவி விலகுவதுதான் நியாயமானது- மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா

கோடநாடு விவாகரத்தில் முதல்வர் பழனிச்சாமி பதவி விலகுவதே நியாயமாக இருக்கும் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Advertisment

Eps is reasonable to resign post in Kodanadu affair - the leader of manithaneya makkal katchi Jawaharlullah

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கோவையில் அக்கட்சியில் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் மத்திய அரசு இடஒதுக்கீடு செய்ததைக் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த அவர், இது சமூக நீதிக்கு எதிரான ஒன்று எனவும் கல்வியிலும் ,சமூக ரீதியிலும் பின் தங்கியவர்களுக்கு தான் இடஒதுக்கீடுகளே தவிர, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அல்ல என அவர் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களைக் காலம் தாழ்த்தாமல் விடுவிக்க வேண்டும் எனவும் அதேபோல் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லீம் சிறைவாசிகளைக் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜவாஹிருல்லா, தேசிய புலனாய்வு அமைப்பினர் முஸ்லீம்களைக் குறிவைத்து விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் கோடநாடு விவாகரத்தில் முழுமையாக விசாரணை நடைபெற வேண்டுமென்றால்,முதல்வர் பழனிச்சாமி பதவி விலகுவதே நியாயமாக இருக்கும்..எனவும் அவர் தெரிவித்தார்.

eps manithaneya makkal katchi Kodanad Estate
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe