Advertisment

“இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா?” - இ.பி.எஸ். கேள்வி!

EPS Question Is this a sign of good law and order

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி, உச்சிமேடு அடுத்த வெளாங்காட்டு வலசு பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம்மாள். விவசாயிகளான இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவரது மகன் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் தனியாக வசித்து வரும் கணவன், மனைவி இருவரும் கடந்த 2 நாட்களாக மகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisment

இதனையடுத்து நேற்று (01.05.2025) இரவு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது கணவன் ராமசாமி வீட்டிற்கு உள்ளேயும், மனைவி பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியேயும் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட எஸ்பி. சுஜாதா சிவகிரி எஸ்.எஸ்.ஐ. அர்ஜுனன், பெருந்துறை டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன், மனைவி என இருவரும் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிவகிரி சுற்று வட்டார பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

இந்நிலையில் இந்த கொலை சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி - பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, ‘சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது’ என்று பெருமை பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா?. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களை பட்டியலிட விழைகிறேன்.

1 மே 2022- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை; 27 சவரன் நகை கொள்ளை. 9 செப்டம்பர் 2023- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை; 15 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை. 29 நவம்பர் 2024- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை. 13 மார்ச் 2025- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை. 14 ஏப்ரல் 2025- ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாட்டி மற்றும் பேரன் அடித்துக் கொலை. இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை ‘தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்’ என்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா?.

EPS Question Is this a sign of good law and order

தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளிய முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இந்த கொலை - கொள்ளையில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

law and order Erode mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe