Advertisment

'இபிஎஸ் ப்ரெசென்ட்; ஓபிஎஸ் மிஸ்ஸிங்' - தொடங்கியது மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்

 'EPS Present... OPS Missing'- Modi-led consultation meeting started

Advertisment

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்த கூட்டம் இன்று (18.7.2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். 26 எதிர்க்கட்சிகளின் சார்பாக இந்த கூட்டம் நடைபெற்றது. இன்று மதியம் 12:00 மணிக்குத் தொடங்கிய கூட்டம் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.

இந்நிலையில் அதே நேரம் பாஜக தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் அதற்கான ஆலோசனைக் கூட்டம் தற்போது துவங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து அதிமுக, ஐஜேகே, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கு கொண்டுள்ளன. பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் முடிந்த நிலையில் டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி, புதுவை முதல்வர் ரங்கசாமி, கிருஷ்ணசாமி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித்பவார், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்குகொண்டுள்ளனர்.

கூட்டம் தொடங்கிய நிலையில், ‘நாடு முழுவதும் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் வந்திருப்பது அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. நாட்டின் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் கூட்டணி இது' எனத்தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிகருத்து தெரிவித்துள்ளார்.

Delhi modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe