திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித் சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் நடுகாட்டுப்பட்டிக்கு சென்ற முதல்வர் பழனிசாமி, சிறுவன் சுஜித்தின் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதல்வர், குழந்தையின் பெற்றோருக்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய், அதிமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.