EPS at the OPS Home

வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில், தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியேமுதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பல மாதங்களாக அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அடுத்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என துணை முதல்வர் ஓ.பி.எஸ்இன்று அறிவித்தார். அதன்பிறகு இருவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதனை அடுத்து தற்போது முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வரின் இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ன் இல்லத்திற்குச் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார். முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்குஇந்தச் சந்திப்பில் நன்றி கூற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment