eps ops sasikala

புதிய பார்வை ஆசிரியரும், வி.கே.சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் நேற்று அதிகாலை சென்னையில் காலமானார். சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தஞ்சை மாவட்டம் விளாரில் வைக்கப்பட்டுள்ள ம.நடராஜன் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அஞ்சலி செலுத்தினார். நடராஜன் உயிருடன் இருக்கும் போது சசிகலா பரோலில் வர, அதிமுக எம்.பி.க்களில் ஒருவர் கூட கையெழுத்து போடாதது மரண வலி அளிப்பதாக சீமான் தெரிவித்தார். நடராஜன் மறைவுக்குக் முதலமைச்சர், துணை முதலமைச்சர் இரங்கல் தெரிவிக்காதது பண்பாடற்ற செயல் என்றும் சீமான் கூறியுள்ளார்.