நாங்குநேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,

eps election campaign

Advertisment

Advertisment

வசந்தகுமாரின் பேராசையால் தான் நாங்குநேரியில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நன்மை செய்வதற்காக இல்லாமல் பதவிக்காக வசந்தகுமார் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகியுள்ளார். அதிமுக வேட்பாளர் நாராயணனை எளிதாக அணுக முடியும் ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளகாங்கிரஸ் வேட்பாளர் கோடீஸ்வரர் என்பதாலும், அவர் வீடு சென்னையில் இருப்பதாலும் இங்கு உள்ள பகுதி மக்கள் தங்களது பிரச்சனைகளை எளிதாக அவரிடம் கொண்டு செல்ல முடியாது. ஆனால் அதிமுக வேட்பாளர் நாராயணன் இதே ஊரைச் சேர்ந்தவர் அவரை எளிதில் சந்தித்து உங்கள் குறைகளை சொல்ல முடியும். யாரை தேர்ந்தெடுத்தால் நன்மை கிடைக்கும் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் நம்மை தரும் வேட்பாளர் வேண்டுமா? வெளியூர் வேட்பாளர் வேண்டுமா?.இடைத்தேர்தல் வரும்போதுதான் எதிர்க்கட்சித் தலைவருக்கு திண்ணை ஞாபகம் வருகிறது. ஊழலின் ஊற்றுக்கண் திமுகதான் அதிமுக ஆட்சியில் எங்கே ஊழல் நடந்தது என்று சொல்லுங்கள் என்று பரப்புரையில்ஈடுபட்டார் முதல்வர் எடப்பாடி.