Advertisment

தருமபுரியில் இபிஎஸ் பேனர்கள் கிழிப்பு!

EPS banners torn down in Dharmapuri

எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

Advertisment

தருமபுரி மாவட்டம் அரூரில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த கொங்கு வேளாளர்கள் சார்பில் பல்நோக்கு பயிற்சி மையம் ஒன்று தொடங்கப்பட உள்ளது. இந்த பல்நோக்கு பயிற்சி மையத்தை இளைஞர்களுக்கு அர்ப்பணிக்கும் விதமாக நடைபெற்ற விழாவில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

Advertisment

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் அடையளம் தெரியாத மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இந்த விழா நடைபெற உள்ள இடத்திற்கு அருகில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார், அரூர் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி ஆகியோர் முகத்தினை குறிப்பிட்டு கிழித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அதிமுக நிர்வாகிகள் அரூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

admk dharmapuri Harur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe