Advertisment

தூத்துக்குடியில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு தமிழக அரசின் உதவி...

eps announces ex gratia for tuticorin police

தூத்துக்குடியில் கொலைக் குற்றவாளிகளைப் பிடிக்க முயன்ற போது கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுடன் குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மனக்கரை பகுதியில் கொலைக் குற்ற வழக்கில் தொடர்புடைய துரைமுத்துவைப் பிடிக்க போலீசார் சென்றுள்ளனர். தேடுதல் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் மீது வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது.

Advertisment

வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் காவலர் சுப்பிரமணியம் என்பவர் உயிரிழந்தார். மேலும் ஒரு காவலர் இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்தார். சுப்பிரமணியம் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் விரைந்தார். உடனடியாகக்குற்றவாளியைப் பிடிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். காவலர்களின் தீவிர தேடுதல் வேட்டையால் துரைமுத்து பிடிபட்டார். அப்போது துரைமுத்துக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://onelink.to/nknapp

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தூத்துக்குடியில் கொலைக் குற்றவாளிகளைப் பிடிக்க முயன்ற போது துரதிஷ்டவசமாக காவலர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுடன் குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்க உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Thoothukudi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe