Advertisment

“சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை...” - இ.பி.எஸ். பகீர் குற்றச்சாட்டு!

EPS Allegation tn Medical sector in decay

தமிழகத்தில் மருத்துவத் துறை சீரழிந்து கிடப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ 41 மாத கால திமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் மருத்துவத் துறை குறித்து எத்தனையோ முறை எடுத்துரைத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசு அலட்சியத்துடன் செயல்படுவது வேதனைக்குரியது.

Advertisment

தமிழ்நாடெங்கும் டெங்கு மற்றும் விஷக் காய்ச்சல் பரவி வருவதாகவும், அதனால் தமிழ்நாடெங்கும் காய்ச்சல் முகாம்கள், இரத்தப் பரிசோதனை, வீடு வீடாகச் சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உள்ளனரா மற்றும் மழைநீர் பழைய டயர்கள், பாத்திரம் போன்றவற்றில் தேங்காமல் உள்ளதா என்பதைக் கண்காணிக்கவும், கொசு மருந்து அடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய அளவு மருந்துகளை இருப்பு வைத்தல் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசைப் பலமுறை வலியுறுத்தியிருந்தேன். ஆனால் இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் இன்று டெங்குகாய்ச்சலால் சிறுமி ஒருவர் தனது உயிரை இழந்துள்ளார்.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம், தேவராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகுரு - அமுல் தம்பதியினரின் 6 வயது இளைய மகள் யாத்திகா. இவர் தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், கடந்த 3ம் தேதி காய்ச்சல் அதிகரித்ததால் இச்சிறுமி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (05.11.2024) உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இச்சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசின் சுகாதாரத்துறை தமிழ்நாடெங்கும் மேற்கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Chengalpattu Dengue
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe