Advertisment

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நான்கு மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

அதிமுக பொதுக்குழுவிற்கு பிறகு ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகிய இரு தரப்புகளும் நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்த நிலையில் தொடர்ச்சியாக 72 நாட்கள் கழித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு கடந்த 8ம் தேதியன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றது. மொத்தமாக முன்னாள் அமைச்சர்கள், அவை தலைவர் தமிழ்மகன் உசேன், மூத்த உறுப்பினர் பொன்னையன், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என பெரும்பாலானோர் தலைமை அலுவலகத்திற்கு சென்றனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிமுக தலைமை அலுவலகம் சென்றது. அங்கு அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

Advertisment

இதன் பின் ஜுலை 11ல் அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரத்தால் சேதம் அடைந்த பகுதிகள் மீண்டும் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனையும் இன்று இபிஎஸ் ஆய்வு செய்தார்.