Advertisment

ஓ.பி.எஸ்ஸை கைவிட்ட இ.பி.எஸ்... உதவிய டி.டி.வி. கட்சியினர்

EPS abandoned OPS. Helped DTV. Party members!

பெரியாரின் 144 பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியாரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

Advertisment

தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்பெரியாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் பெரியாரின் உருவப்படம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அங்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அங்கு மரியாதை செலுத்த வந்தார். ஆனால், எடப்பாடி தரப்பினர் அவர்கள் கொண்டுவந்த பெரியார் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்திவிட்டு அவர்களே எடுத்து சென்றனர்.

Advertisment

அதேசமயம், பெரியாருக்கு மரியாதை செலுத்த வந்த ஓ.பி.எஸ். தரப்பினர் பெரியார் உருவப்படம் எடுத்து வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் யோசனை செய்து கொண்டிருந்தபோது, இ.பி.எஸ் .-ஓ.பி.எஸ்க்கு இடையே டி.டி.வி. தினகரனின் அமமுகவினர் அங்கு வந்து பெரியார் படத்தை வைத்து மரியாதை செலுத்தினர். உடனே ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அமமுகவினரிடம் விவரத்தை சொல்லி பெரியார் படத்தை சிறிது நேரம் வைக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதனை ஏற்று டி.டி.வி தினகரனின் அமமுகவினர் அவர்கள் கொண்டுவந்த பெரியார் படத்தை அங்கு வைத்தனர். அந்த உருவப்படத்திற்கு ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ammk ops_eps periyar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe