Advertisment

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு; அசத்திய பள்ளி மாணவிகள்!

Environmental protection awareness in vellore

சுற்றுச்சூழலை காப்போம் என்றும் எங்கும் பிளாஷ்டிக், எதிலும் பிளாஷ்டிக் என்றும் பாட்டி வேடமிட்டு பள்ளி மாணவி விழிப்புணர்வு ஊட்டினார்.

Advertisment

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நாட்டின் 76 வது குடியரசு தினவிழா கொடியேற்றத்துடன் கடந்த 26ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் பேச்சுப்போட்டியில் முதலிடம் பிடித்த ஜமால்புரம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சேர்ந்த சகோதரிகளான 5 ம் வகுப்பு மாணவி தர்ஷினி, 2- ம் வகுப்பு மாணவி திகழினி ஆகிய இருவர் "சூழல் பாதுகாப்பு" குறித்து விழிப்புணர்வு பேச்சு மற்றும் கதைகளை கூறினர்.

Advertisment

இதில் 2 -ம் வகுப்பு மாணவி திகழினி ‘ஜில்ஜில் பாட்டி’ என்ற பெயரில் விழிப்புணர்வு ராஜா கதையைக் கூறினார். சகோதரிகளின் இந்த கனீர் காந்தப்பேச்சு பார்ப்போரை மெய்சிலிர்க்கச் செய்தது. இவர்கள் இருவரையும் வேலூர் மாநகராட்சி ஆணையர் மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe