Environmental clearance for Parantur Airport

சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் பரந்தூரில் 5,368 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக பரந்தூர் கிராமங்களைச் சேர்ந்த வளத்தூர், தண்டலூர், சிங்கிலி பாடி, அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

Advertisment

இந்த திட்டத்திற்கு அந்த பகுதியில் உள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் தாக்க அனுமதி கொடுத்துள்ளது. இதற்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல்அமைச்சகம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment