Skip to main content

“பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 12/05/2024 | Edited on 12/05/2024
“Environment should be created for the indigenous people to live in peace” - E.P.S. Emphasis

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள பென்னாகரம் வனப்பகுதிக்கு உள்பட்ட பேவனூா் காப்புக்காடு பகுதியில் வேப்பமரத்துகொம்பு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் குடியிருந்து வருபவா்களை அங்கிருந்து வெளியேறுமாறு வனத்துறையினா் பலமுறை அறிவுறுத்தியுள்ளனர். இத்தகைய சூழலில் வேப்பமரத்துகொம்பு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு வனத்துறையின் மூலம் வனப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தகர கொட்டகை மற்றும் சிறிய அளவிலான ஓட்டு வீட்டை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனையடுத்து தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டால் கிராம மக்கள் அனைவரும் வனப் பகுதியிலிருந்து வெளியேறுவதாக வனத் துறையினரிடம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பென்னாகரம் வனச்சரக அலுவலா் செந்தில்குமார் தலைமையிலான வனத் துறையினா், ஒகேனக்கல் காவல் துறையினா் நேரடியாக வேப்பமரத்துகொம்பு கிராமத்திற்குச் சென்று கிருஷ்ணன் என்பவரின் வீட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அப்போது  கிராம மக்கள் இந்த சம்பவத்தை தடுக்க முயற்சித்த போது வனத் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடர்பான  சர்ச்சைக்குரிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

“Environment should be created for the indigenous people to live in peace” - E.P.S. Emphasis

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக தருமபுரி மாவட்ட வனத்துறை  சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “பென்னாகரம் வனச்சரகம் பேவனூர் காப்புக்காட்டில் மணல் திட்டு பகுதியில் கிருஷ்ணன் என்பவர் அத்துமீறி நுழைந்து தகர கொட்டகை அமைத்துள்ளார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படியும்,  தமிழ்நாடு வனச்சட்டப்படியும் தகர கொட்டகை, சிறிய ஓட்டு வீடு ஆகிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் கொட்டகை இருந்த இடம் யானை வலசை செல்லும் பாதை ஆகும். அதே சமயம் வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்த கிருஷ்ணன் பூர்வகுடிகள் அல்ல. கிருஷ்ணனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பென்னாகரம் பகுதியில் விளை நிலங்களும், வீட்டு மனையும் உள்ளன” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே வனப்பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களை வெளியேற்ற அவர்களின் வீடுகளை உடைத்து, பெண்களைத் தாக்கி வன்முறையைக் கையாண்ட திமுக அரசின் வனத்துறை மற்றும் காவல்துறையின் செயலுக்கு எனது கடும் கண்டனம். மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி மக்களை அடிப்படை மனிதாபிமானம் கூட இன்றி வலுக்கட்டாயமாக அவர்களின் இருப்பிடத்தை விட்டு அராஜகப் போக்குடன் வெளியேற்றுவதும், பெண்கள் மீது ஆண் காவல்துறையினர் வன்முறையில் ஈடுபடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

“Environment should be created for the indigenous people to live in peace” - E.P.S. Emphasis

சட்டத்தின் நெறிகளை மீறி செயல்பட்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாடு மோதி விபத்து; சிறப்பு உதவி ஆய்வாளர் பலி!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Cuddalore dt Tittakudi police station ssi Bharathidasan incident

கடலூர் மாவட்டம் திட்டக்குடி காவல் நிலையத்தில் சிறப்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாரதிதாசன். இவர் திட்டக்குடி - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென சாலையில் வந்த மாடு ஒன்று பாரதிதாசனின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதனால் கீழே விழுந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பாரதிதாசன் மீது அச்சமயத்தில் அங்கு வந்த அரசு பேருந்து அவர் மீது ஏறியது. இந்த விபத்தில் பாரதிதாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் நாள்தோறும் விபத்துகளைச் சந்திப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்துப் பல முறை புகார் அளித்து முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாடு மோதிய விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Cuddalore dt Tittakudi police station ssi Bharathidasan incident

முன்னதாக விருத்தாசலம் அருகே பரவலூர் - கோமங்கலம் இடையே பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தை வேடிக்கை பார்க்க அப்பகுதியில் குவிந்த கூட்டத்தின் மீது கார் ஒன்று மோதியது. இதில் 17 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் தொடர்புடைய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதே சமயம் மற்றொரு விபத்திற்குக் காரணமாக கார் ஓட்டுநரைப் பிடித்து அங்கிருந்தவர்கள் சரமாரியாகத் தாக்கினர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் காரணமாக விருத்தாசலம் - சேலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் வெகுவாக அவதியடைந்தனர். 

Next Story

ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்; ‘நடந்தது என்ன?’ -  காவல்துறை விளக்கம்!

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
Thiruvenkadam incident An explanation has been given by the Chennai Police

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் இந்த வழக்கு தொடர்பான திடுக்கிடும் தகவல்களையும், அதற்கான சதி திட்டம் தீட்டிய இடத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது குறித்தும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரை இன்று (14.07.2024) அதிகாலை புழல் வெஜிடேரியன் நகருக்கு அழைத்துச் சென்று தடயங்கள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து கண்டறிவதற்காக காவல்துறையினர் சென்றனர். அப்போது அவர்களின் பிடியில் இருந்து ரவுடி திருவேங்கடம் தப்பிச் சென்று, அப்பகுதியில் உள்ள இரும்பு தகடு வேயப்பட்ட சிறு கூரையின் உள்ளே பதுங்கிக் கொண்டு அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் காவல்துறையினரை நோக்கி சுட்டுள்ளார்.

Thiruvenkadam incident An explanation has been given by the Chennai Police

அப்போது சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தும் சரணடையாமல் வெளியே வர மறுத்து தப்பி செல்ல திட்டம் தீட்டியதாக தெரிகிறது. இதனால் வேறு வழியின்றி காவல்துறையினர் ரவுடி திருவேங்கடத்தை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில் மார்பிலும், வயிற்றிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சுருண்டு விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை மீட்டு மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு திருவேங்கடத்தின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக பெருநகர சென்னை காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கே - 1 செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் சென்னை   குன்றத்தூர், பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் திருவேங்கடம் (வயது 33) உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

Thiruvenkadam incident An explanation has been given by the Chennai Police

இவ்வாறு கைது செய்யப்பட்ட திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். அதில் திருவேங்கடம் இந்த கொலை வழக்கு தவிர இரண்டு கொலை வழக்குகள் மற்றும் வழிப்பறி, கொடுங்காய வழக்கு உள்ளிட்ட ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று (14.07.2024) அதிகாலை போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடத்தை இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற எதிரி தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். அவ்வாறு அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தினர்.

அப்போது பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பி ஓடிவிட்டார். உடனடியாக பாதுகாவலாக சென்ற காவலர்கள் அவரை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை. புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது  தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார். உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த திருவேங்கடம் உடனடியாக மெரிடியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக எம் - 3 புழல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை நீதிமன்ற நிதிபதி விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.