Skip to main content

உரிமைத் தொகை அறிவிப்பு - உற்சாகத்தில் இல்லத்தரசிகள்! சொன்னதை செய்த தமிழ்நாடு அரசு

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

- தெ.சு.கவுதமன் 

 

Entitlement Notice - Housewives in Excitement! The Tamil Nadu government did what it said

 

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியான இல்லத்தரசிகளுக்கான உரிமைத்தொகை அறிவிப்பு தான் இன்றைக்கு பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. சட்டமன்றத் தேர்தலின்போது பெண்களுக்கான உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, பெண்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்றதுமே உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மகளிர் இலவசப் பேருந்து திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், உரிமைத்தொகை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.  

 

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற தருணத்தில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. அதனைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சியில் இருந்த சூழலில், முன்னர் இருந்த எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வும் பெருத்த கடன்சுமையை வைத்துவிட்டுச் சென்றதன் காரணமாக, நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது. எனவே உரிமைத்தொகை குறித்து எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இது ஒன்றை மட்டுமே பிடித்துக்கொண்ட எதிர்க்கட்சிகள், தேர்தல் அறிக்கையில் எதையுமே நிறைவேற்றவில்லை என்று ஒட்டுமொத்தமாகக் குற்றம் சுமத்தின.

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த உரிமைத்தொகை குறித்துதான், தி.மு.க. அரசுமீது கடுமையாகக் குற்றம்சாட்டினார்கள். ஒருபுறம் சொத்து வரி உயர்வு, இன்னொருபுறம், பால் மின்கட்டண உயர்வு என அதிகம் பாதிக்காத வகையில் வருவாயைப் பெருக்கும் நடவடிக்கையில் இறங்கியது தமிழக அரசு. இன்னொருபுறம், உரிமைத்தொகை வழங்குவது தொடர்பான ஆரம்பகட்ட வேலைகளில் அரசு இறங்கியுள்ளதாக செய்திகள் கசியத் தொடங்கியது. இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் உரிமைத் தொகை வழங்காமல் இழுத்தடிப்பதை எதிர்க்கட்சிகள் பிரச்சனையாக்க முயல, பிரச்சாரத்துக்கு வந்த அமைச்சர் உதயநிதி, இன்னும் சில மாதங்களில் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரச்சாரத்தின் போது பேசினார்.

 

nn

 

இறுதி நாளில் பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "திமுக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 1000 உரிமைத் தொகையை, நிதிநிலைமை சரியாக இருந்திருந்தால் உடனே வழங்கி இருப்போம். இருப்பினும், மார்ச் மாதம் நிதி நிலை அறிக்கையில் பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ. 1000 எப்போது வழங்கப்படும் என அறிவிக்கவுள்ளோம்" என்று தெரிவித்தார். இதையடுத்து, விரைவில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது உறுதியானது. ஸ்டாலினின் இந்த அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானதென்று கூறி அ.தி.மு.க. தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. அதற்கு தி.மு.க. சார்பில் பதிலளிக்கப்பட்டது.

 

இந்நிலையில் தான் பட்ஜெட் உரையில், அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த மகளிர் உரிமைத்தொகை குறித்த அறிவிப்பினை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார். "ஒன்றிய அரசால், பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைக்குப் பேருதவியாக இருக்கும். சிறப்புமிக்க இந்தத் திட்டம், கலைஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15ம் நாள் முதல் இத்திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும். தமிழ்நாடு மகளிரின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்திற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று அறிவித்துள்ளார். இதற்காக இந்த பட்ஜெட்டில் 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்குச் செல்லாமல் இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்களுக்கு உதவிகரமாகவும், வீட்டை நிர்வகிப்பதற்கான அங்கீகாரமாகவும் இந்த உரிமைத்தொகை அமையும். சுமாராக 70 -80 லட்சம் குடும்பத்தலைவிகள் வரை இந்த உரிமைத்தொகையைப் பெறக்கூடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த உரிமைத்தொகை இல்லத்தை நிர்வகிக்கும் பெண்கள், "வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்" என்று சொல்லாதபடி, "வீட்டை நிர்வகிப்பதற்கான உரிமைத்தொகையாக 1000 ரூபாயைச் சம்பாதிக்கிறேன்" என்ற மன தைரியத்தை உருவாக்க உதவும்! இதற்காக இன்னொருவரை எதிர்நோக்கியிருக்கும் நிலை மாறும்! இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு நிலவுகிறது! கூட்டணிக் கட்சியினரும் வெகுவாகப் பாராட்டுகின்றனர். எடப்பாடி பழனிசாமி மட்டும், அனைவருக்கும் உரிமைத்தொகை என்று அறிவித்து விட்டு, தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் என்று சொல்வது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பட்ஜெட் பாரபட்சம்; இந்தியா கூட்டணி போராட்டம் அறிவிப்பு

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
budget bias; Announcement of India Alliance struggle

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

budget bias; Announcement of India Alliance struggle

செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டர் பக்கத்தில் பல கோரிக்கைகளை எடுத்து வைத்திருந்தேன். நிதிநிலை அறிக்கையில் இதுவெல்லாம் இடம்பெற வேண்டும்; இதையெல்லாம் எதிர்பார்க்கிறோம் என்று கோரிக்கைகளை வைத்திருந்தேன். மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்க கூடிய சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும்; கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதலை விரைந்து வழங்க வேண்டும்; தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவித்திருக்கக்கூடிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்; தாம்பரம் செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலை திட்டத்திற்கான ஒப்புதல் வழங்க வேண்டும் இப்படி சில கோரிக்கைகளை நான் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் எதையுமே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. மைனாரிட்டி பாஜகவை மெஜாரிட்டி பாஜகவாக்கிய ஒரு சில மாநில கட்சிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் சில திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். அறிவித்திருக்கிறார்களே தவிர அதையும் நிறைவேற்றுவார்களா என்பது சந்தேகம்தான் என்னைப்  பொறுத்தவரை. எப்படி தமிழ்நாட்டுக்கு மெட்ரோ ரயில் திட்டம் என்று அறிவித்துவிட்டு நிதி ஒதுக்காமல் இன்றுவரை ஏமாற்றி வருகிறார்களோ அதேபோல அந்த மாநிலங்களுக்கும் எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. தமிழகத்தை மத்திய அரசு ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருப்பதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் நான் பங்கேற்க வேண்டாம் என முடிவெடுத்து இருக்கிறேன். அதை நான் புறக்கணிக்க போகிறேன். நாளை திமுக எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவார்கள்'' என்றார்.

இந்நிலையில் பட்ஜெட் பாரபட்சமானது என ஒரு நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய கூட்டணி எம்பிக்கள் நாளை போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Next Story

'மின் கட்டண உயர்வுக்கு அதிமுகவே காரணம்'- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
'The AIADMK is the reason for the increase in electricity tariff' - Minister Thangam Tennarasu interview


மின் கட்டண உயர்வுக்கு அதிமுகவே காரணம் எனத் தமிழக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ''ஜெயலலிதா இருந்தவரை உதய் மின் திட்டத்தில் இணைவதற்கு எதிர்ப்பு இருந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த அன்றைய தினம் அமைச்சராக இருந்த பியூஸ்கொயல் சென்னைக்கு வந்து இந்தியாவிலேயே தமிழ்நாடு தனி மாநிலமாக இருக்கிறது. இங்க இருக்கக்கூடிய முதலமைச்சரை பார்க்கவே முடியவில்லை. அமைச்சர்களை கேட்டால் அவர்கள் எதையும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள் என்று சொல்லி விமர்சனம் செய்தார்கள். அன்றைய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பியூஸ் கோயல் மீது சீறிப்பாய்ந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அன்றைய தினத்தில் பத்திரிகைகளில் பெருவாரியாக வெளியே வந்திருக்கிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி உதய் மின் திட்டத்தில் அன்றைய மின்துறை அமைச்சர் கையெழுத்திட்டு தமிழ்நாட்டையும் அதில் இணைத்துக் கொண்டதற்கு பிறகுதான் இந்த மின்சார கட்டணங்கள் என்பது உயர்ந்தது. ஒவ்வொரு வருடமும் மின்சார உயர்வுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் தெரிவிக்கும் மிக முக்கியமான ஷரத் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அன்றைய அதிமுக அரசு. ஏன் இந்த மின் கட்டணம் உயர்வு வேண்ட கூடிய சூழ்நிலை வந்தது. இதற்கான சீரழிவுக்கு யாரெல்லாம் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் கடந்த 2011-12 ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது மின்சார வாரியத்திற்கு ஒட்டுமொத்த நிதி இழப்பு 18,954 கோடியாக இருந்தது. பின் நாட்களில் 10 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் அவர்களின் திறனற்ற நிர்வாகத்தின் காரணமாக இந்த செலவு ஏறத்தாழ 94,313 கோடியாக அதிகரித்து. 2021 இல் நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு வரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 76 கோடி ரூபாயாக தமிழ்நாடு மின்சார உற்பத்தி கழகத்தின் உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த நிதி இழப்பு இருந்தது.

இதற்கு காரணம் யார்?  ஆனால் பின்னால் வந்த திமுக அரசு இந்த நிதி இழப்பினை 2021-22 இல் இருந்து 100% அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிதியிழப்பை முந்தைய அரசு வழங்காத காரணத்தால் டி.என்.இ.பியின் கடன் 43,493 கோடி ரூபாய். இந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்து. 2022-ல் கடன் மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 723 கோடி ஆகும். இந்த தொடர்ச்சியான இழப்புகளை சரி கட்டுவதற்காக தான் இந்த மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் ஒரு கோடி வீட்டு இணைப்பு உள்ளவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. குறைந்த அளவில் தன் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை நாங்கள் விலாவாரியாக கொடுத்திருக்கிறோம்'' என்றார்.