Advertisment

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து தாயகம் திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு! 

An enthusiastic welcome to the players who returned home after collecting medals in international games!

நேபாளம் நாட்டில் நடைபெற்ற இந்தோ- நேபாளம் சர்வதேச அளவிலான போட்டிகள் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை நடைபெற்றது. இதில் மதுரையில் இருந்து 21 மாணவிகள் மற்றும் 3 மாணவர்கள் என பளுத்துக்குதல், சிலம்பம், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் என பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 16 மாணவிகள் தங்கப் பதக்கமும், 3 மாணவர்கள் தங்கப் பதக்கமும், 5 மாணவிகள் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.

Advertisment

மதுரை தனியார் கல்லூரியைச் சேர்ந்த சினேகா, சிவசக்தியா, ஹரிணி மற்றும் பூஜா ஆகிய மாணவிகள் பளுத்துக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். தொடர்ந்து தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் அர்ச்சனா, சிவரஞ்சனி, ஐஸ்வரியா, ஜனனி யோகராஜ் பளுத்துக்குதல் போட்டியில் தங்கமும், லோஹிதா வெள்ளியும் வென்றுள்னர்.

Advertisment

மேலும் தடகள போட்டிகளில் பங்கேற்ற அக்ஷயா, அட்ச்சயா, லத்திகா சாரா, பிரதிக்ஷா, மோனாஜா, ஆர்த்தி குவர் தங்கமும் சிவ வர்ஷினி, சுறக்ஷா பாய் ஆகியோர் வெள்ளியும் வென்றுள்ளனர். சிலம்பம் போட்டியில் ஸ்வேதா ஶ்ரீ ,கல்லூரி மாணவன் வசந்த் கிஷோர், யோகபிரகதீஸ் தங்கம் வென்றுள்ளார்.

பதக்கங்களை வென்று மதுரை ரயில் நிலையத்திற்கு வந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

sports madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe