“Ensure that proper treatment is given” – Chief Minister's directive to the MLA

Advertisment

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,தலைமை செயலகத்தில் இருந்து அண்ணா அறிவாலயம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

சென்னை அண்ணா சாலையில் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற சூளைமேட்டை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் சலையில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்துதலையில் காயம் ஏற்பட்டுவிட்டது.

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு இருந்தனர். அவ்வழியாக சென்று கொண்டிருந்த முதல்வர், கான்வாய் வாகனத்தினை நிறுத்திகீழிறங்கிகாயமடைந்தவரை காவலர் ஒருவருடன் ஆட்டோவில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Advertisment

இதன் பின் சட்டமன்ற உறுப்பினர் எழிலனை தொடர்பு கொண்டு அரசு மருத்துவமனையில் காயமடைந்தவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார். காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பிய பின் முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.