Skip to main content

‘செறிவூட்டப்பட்ட அரிசி’ திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

enriched rice against for cuddalore pennadam people

 

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி ஏப்ரல் 1 முதல் போரிக் அமிலம், இரும்பு சத்து, வைட்டமின் பி-12 ஆகிய நுண்ணூட்டச் சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசி பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

 

இந்நிலையில், கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் உடல்நலத்தைக் கெடுக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடைகளில் விநியோகிக்கக் கூடாது என வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் மகளிர் ஆயம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் ஆயம் அமைப்பின் பொருளாளர் ம.கனிமொழி தலைமை தாங்கினார். அமைப்புக் குழு உறுப்பினர் மு.வித்யா, செயற்குழு உறுப்பினர்கள் க.இந்துமதி, வே.தமிழ்மொழி, முன்னாள் கிளைச் செயலாளர் ப.எழிலரசி மற்றும் மா.விருத்தாம்பாள், பி.சாந்தலெட்சுமி, ம.மகாலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஞானம்.இராசேசுவரி வரவேற்றார். தமிழ்த் தேசியப் பேரியக்க துணைத் தலைவர் க.முருகன், மகளிர் ஆயம் பொதுச்செயலாளர் மு.செந்தமிழ்ச்செல்வி, தமிழக உழவர் முன்னணி பொருளாளர் அரா.கனகசபை, நல்லூர் ஒன்றிய தலைவர் சி.பிரகாசு, பாவலர் சிலம்புச் செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

 

ஆர்ப்பாட்டத்தில், "வருகின்ற ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட உள்ளதாகவும், அவ்வாறு வழங்கப்படும் அரிசியால் வயிற்றுப்போக்கு, வயிற்று அழற்சி, ஒவ்வாமை உள்ளிட்ட பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படும் எனவும், செறிவூட்டப்பட்ட அரிசியும் உணவு எண்ணெய்யும் கட்டாயமாக்கப்படும் போது அரிசி மற்றும் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் சிறு அரிசி ஆலைகள், செக்கு எண்ணெய் உற்பத்தியாளர்கள், சிறு பால் உற்பத்தியாளர்கள் ஆகியோர் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள்,  மக்களின் உடல்நலத்திற்கும் சிறு உற்பத்தியாளர்களுக்கும் எதிரான செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்" எனக் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

 

enriched rice against for cuddalore pennadam people

 

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழக உழவர் முன்னணி மற்றும் மகளிர் ஆயம் அமைப்புகளைச் சேர்ந்த  மாணவ மாணவிகள், ஆண்கள், பெண்கள் எனத் திரளாகப் பங்கேற்றனர். த.பரிமளா நன்றி உரையாற்றினார். பின்னர் மணிமுத்தாறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தங்க.தனவேல் மற்றும் மகளிர் ஆயம் நிர்வாகிகள் விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை கைவிடக் கோரி மனு அளித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.