Advertisment

எண்ணூர் தலைமை காவலர் தற்கொலை.. போலீசார் விசாரணை!

Ennore head constable Incident. Police investigation!

தென்காசியில் துப்பாக்கியால் சுட்டு எஸ்.எஸ்.ஐ தற்கொலை செய்து கொண்டது தெரியவந்த நிலையில், தற்பொழுது இதேபோல் எண்ணூர் காவல் நிலைய தலைமைக் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் எஸ்.எஸ்.ஐ ( சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்) பார்த்திபன் தங்கி இருந்த நிலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்கொலை செய்து கொண்ட பார்த்திபன் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரனின் காவல் பணிக்காக வந்திருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. சிறப்புக் காவல் உதவி ஆய்வாளரான பார்த்திபனின் தற்கொலைக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் இதேபோல் சென்னை எண்ணூர் காவல் நிலைய தலைமைக் காவலர் யுவராஜ் மீஞ்சூரில் உள்ள அவரது வீட்டில் பிளேடால் அறுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நீண்ட விடுப்பில் இருந்து வந்த யுவராஜ் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

incident police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe