Skip to main content

பி.இ படித்தவர்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்தில் வேலை !

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் "Tamil nadu Pollution Control Board"  (Assistant Engineer, Environmental Scientist , Assistant (Junior Assistant) , Typist ) உள்ளிட்ட 224 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. இதற்கான பணியிடங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பணிக்களுக்கு விண்ணப்பிக்க இணையதள முகவரி : http://www.tnpcb.gov.in/ மற்றும் https://tnpcb.onlineregistrationform.org/TNPCB/LoginAction_loadIndex.action சென்று விண்ணப்பிக்கலாம். 
 

pollution control



மேற்கொண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி (B.E , M.E ,B.Tech , M.Tech , B.Sc ,M.Sc , Chemistry ,Zoology , Biology ,Botany , Environmental Science , Environmental Chemistry , Computer course Complete Certificate , Diploma ) உள்ளிட்ட கல்வி தகுதியை கொண்டவர்கள் எளிதாக இணையதளத்தில்  விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 25-03-2019 , விண்ணப்பிக்க கடைசி நாள் : 23-04-2019. அதனை தொடர்ந்து விண்ணப்பக்கட்டணம் இணைய தள  வழியில் (Debit card , Credit card , Net Banking ) செலுத்தலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணம் (OBC/MBC,General) ரூபாய் : 500 மற்றும் (SC/ST , Differently Abled Persons ) ரூபாய் : 250 செலுத்த வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் தெரிவித்துள்ளது. 

 

pollution control



இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி : www.tnpcb.gov.in சென்று அறியலாம். அதே போல்  (Eligibility Queries , Monday to Friday 10.30AM - 5.00PM )தொலைபேசி எண் : 044-22200909 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். Portal (or) Payment Related Queries தொலைபேசி எண் : 044-22353160 / 044-22200411. ஈ-மெயில் முகவரி : tnpcb@onlineregistrationform.org ஆகும். இந்த அறிய வாய்ப்பை தமிழக இளைஞர்கள் ஒவ்வொரு வரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.