Advertisment

இன்று துவங்குகிறது பொறியியல் கலந்தாய்வு

 Engineering consultation starts today

Advertisment

பொறியியல் படிப்புகளுக்கு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் துவங்குகிறது.

தமிழகத்தில் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் சேர சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற நிலையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதற்கு முன் தேதிகள் வெளியிடப்பட்டு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாகவும் பொறியியல் கலந்தாய்வு தேதிகள் மாற்றப்பட்டு கொண்டே வந்தது. இந்நிலையில் சில தினங்கள் முன்பு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் தேதியை அறிவித்தார்.

அந்த வகையில் இன்று முதல் பொறியியல் படிப்புகளுக்கு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று துவங்கி நவம்பர் 13 ம் தேதி வரை நடைபெறும். நான்கு கட்டங்களாக நடத்தப்படும் இந்த கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும் எனவும் தங்களுக்கான கல்லூரிகளை தேர்வு செய்த பின் ஒரு வாரத்திற்குள் மாணவர்கள் தங்கள் கல்விக் கட்டணத்தை கல்லூரிகளில் செலுத்திவிட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

Ponmudi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe